சாத்தூர் பகுதியில் செயல்படாத இ–சேவை மையங்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


சாத்தூர் பகுதியில்  செயல்படாத இ–சேவை மையங்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 6:33 PM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் பகுதியில் செயல்பட்டாத இ–சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இ–சேவை மையம் சாத்தூர் யூனியனில் உள்ள 46 ஊராட்சிகளிலும் இ–சேவை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 46 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு

சாத்தூர்,

சாத்தூர் பகுதியில் செயல்பட்டாத இ–சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இ–சேவை மையம்

சாத்தூர் யூனியனில் உள்ள 46 ஊராட்சிகளிலும் இ–சேவை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 46 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் செலவில் மையங்கள் அமைக்கப்பட்டன. 6 மாதங்களாக இடம் தயாராக இருக்கும் நிலையில் மையங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படாததோடு கணினி உள்ளிட்டவையும் கொண்டு வரப்படவில்லை.

இ–சேவை மையம் மாவட்ட புது வாழ்வு இயக்கத்தின் மேற்பார்வையில் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாததால் அரசின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் முடங்கிக்கிடக்கிறது. தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ள இந்தக் காலக்கட்டத்தில் பட்டா மாறுதல், பிறப்பு இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளை எளிதில் பெற்றுக்கொள்ள இ–சேவை மையம் திறக்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் அந்த பலனை பெற சாத்தூர் பகுதி மக்கள் மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இ–சேவை மையங்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story