கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக உதவியாளர் பணிக்கு 26 முதல் 30–ந் தேதி வரை வேலூரில் நேர்காணல் கிருஷ்ணகிரி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்


கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக உதவியாளர் பணிக்கு 26 முதல் 30–ந் தேதி வரை வேலூரில் நேர்காணல் கிருஷ்ணகிரி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 6:42 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக உதவியாளர் பணிக்கு வருகிற 26 முதல் 30–ந் தேதி வரை வேலூரில் நேர்காணல் நடக்கிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி

கிருஷ்ணகிரி,

கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக உதவியாளர் பணிக்கு வருகிற 26 முதல் 30–ந் தேதி வரை வேலூரில் நேர்காணல் நடக்கிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அலுவலக உதவியாளர் பணி

கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு வேலூர் மண்டலத்தில் வருகிற 26–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் நேதாஜி கலையரங்கம் கோட்டை அருகில், வேலூர் 632 004 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

வலைதளத்தில் பதிவிறக்கம்

மேலும் நேர்முக அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை – என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முக அழைப்பாணைகளை இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story