வருகிற பட்ஜெட்டில் ஜோலார்பேட்டை – ஓசூர் ரெயில் பாதை திட்டத்தை அறிவிக்க வேண்டும் மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் கோரிக்கை
கிருஷ்ணகிரியில் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சேகரன், தணிக்கையாளர் கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகரன், வருகிற ஜனவரி 7–ந் த
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சேகரன், தணிக்கையாளர் கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகரன், வருகிற ஜனவரி 7–ந் தேதி நடக்கும் எழுச்சி மாநாட்டில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை குறித்தும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும், மருத்துவப்படி ரூ. 500–ம் போன்ற கோரிக்கைகளையும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் பேசினார்.
கூட்டத்தில், ஜோலார்பேட்டை முதல் ஓசூர் வரை பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக புதிய ரெயில்பாதை அமைக்க சுமார் 30 வருடங்களாக சங்கமும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்கள், மனுக்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த மாவட்ட மக்களின் கோரிக்கையினை ஏற்று, வருகிற பட்ஜெட்டில் இந்த ரெயில் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்கி, பணியை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்வது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல்–அமைச்சரை கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.