கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. பாரி ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. பாரி ஆய்வு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 6:45 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. பாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஐ.ஜி. ஆய்வு கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி வந்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்,

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. பாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஐ.ஜி. ஆய்வு

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி வந்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், கொடுங்குற்ற வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள், ஜீப் உள்ளிட்ட வாகனங்களின் பராமரிப்பு முறையை ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 31 போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் கேட்டார். இதைத் தொடர்ந்து இருசக்கர ரோந்து வாகனத்துடன் நின்ற போலீசாரிடம், இருசக்கர வாகனத்தின் முன்புற சக்கரத்தை விரைவாக கழற்றி பொருத்துபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ரூ.500 பரிசு

இதைத் தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 15–க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளின் முன்புற சக்கரத்தை கழற்றி மாட்டும் பணியில் ஈடுபட்டனர். இதில் கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் முகமது அலி விரைவாக முன்புற சக்கரத்தை கழற்றி, மீண்டும் பொருத்தினார். இதையடுத்து அவருக்கு ரூ.500 வெகுமதியாக ஐ.ஜி. பாரி வழங்கினார். மேலும் வாகனத்தின் பராமரிப்பை சோதனை செய்ய இந்த போட்டி வைக்கப்பட்டதாக ஐ.ஜி. பாரி தெரிவித்தார்.

இதன் பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு செய்த ஐ.ஜி. பாரி, அலுவலக பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story