கொலை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது டி.ஐ.ஜி. நாகராஜன் தகவல்


கொலை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது டி.ஐ.ஜி. நாகராஜன் தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 6:49 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கொலை, திருட்டு வழக்குகள் மற்றும் சாராய வழக்குகளில் தொடர்புடைய 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன் கூறினார். போலீஸ் அதிகாரி ஆய்வு நாமக்கல் மாவட்டத்தில்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கொலை, திருட்டு வழக்குகள் மற்றும் சாராய வழக்குகளில் தொடர்புடைய 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன் கூறினார்.

போலீஸ் அதிகாரி ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் சேலம் சரக டி.ஐ.ஜி. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையொட்டி நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருகை வந்த அவரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நாமக்கல் உட்கோட்டத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கினார்.

45 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு கொலை வழக்கு மற்றும் தொடர் திருட்டு வழக்குகள் மற்றும் சாராய வழக்குகளில் தொடர்புடைய 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் நாமக்கல் உட்கோட்டத்தில் மட்டும் 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.

நாமக்கல் உட்கோட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போய் உள்ளன. இவற்றில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு விட்டன. குற்றம் கண்டுபிடிப்பு 95 சதவீதம் ஆகவும், திருட்டு போன பொருட்கள் மீட்பு 93 சதவீதமாகவும் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நாமக்கல் நகரில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் டி.ஐ.ஜி. நாகராஜன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தாமரைசெல்வன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story