படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை


படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2016 2:45 AM IST (Updated: 22 Dec 2016 7:38 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர். அரசுப்பள்ளி வாணாபுரத்தில் அரசினர் மேல் நிலைப்பள்ளி

வாணாபுரம்,

வாணாபுரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர்.

அரசுப்பள்ளி

வாணாபுரத்தில் அரசினர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வாணாபுரம் அருகேயுள்ள குங்கிலிநத்தம், பெருந்துறைப்பட்டு, வாழவச்சனூர், கொட்டையூர், அகரம்பள்ளிப்பட்டு, எடககல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் காலையில் சைககிள், பஸ்களில் பள்ளிக்கு வருகின்றனர்.

பள்ளி முடிந்து மாணவர்கள் மாலை நேரங்களில் வாணாபுரத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. மாலையில் குறிப்பிட்ட பஸ்களே வாணாபுரம் வழியாக செல்கின்றன. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் முண்டியடித்து கொண்டு பஸ்சில் ஏறும் நிலை காணப்படுகிறது.

ஆபத்தான பயணம்

ஒரு பஸ்சை தவறவிட்டால், மற்றொரு பஸ் வருவதற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் முதலில் வரும் பஸ்சில் போட்டி, போட்டு ஏறி வீட்டிற்கு செல்கிறார்கள். இதனால் 60 பேர் பயணம் செய்யும் பஸ்சில் நூற்றுக்கணககானோர் பயணம் செய்கிறார்கள். மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டில் நின்றபடியும், தொங்கியபடியும் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய செய்கிறது. மாணவர்கள் தினமும் ஆபத்தான நிலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

கூடுதல் பஸ்கள்

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயகக வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமககள் கோரிககை விடுத்துள்ளனர்.



Next Story