மகள் மீது ஆசை கொண்டதால் மாற்றுத்திறனாளியை கொலை செய்த பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் மகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
மகள் மீது ஆசை கொண்டதால் மாற்றுத்திறனாளியை கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக மகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மாற்ற
வேலூர்,
மகள் மீது ஆசை கொண்டதால் மாற்றுத்திறனாளியை கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக மகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
மாற்றுத்திறனாளிவேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 45). மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் (54) என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஜெயவேலு முனியம்மாளின் மகள் துர்காதேவியை (34) அடைய நினைத்துள்ளார். தனது ஆசை குறித்து முனியம்மாளிடம் ஜெயவேலு கூறினார். இதனால் முனியம்மாளுக்கும் ஜெயவேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஜெயவேலுவை கொலை செய்ய முனியம்மாள் மற்றும் துர்காதேவி ஆகியோர் திட்டம் தீட்டினர். இந்த திட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த துர்காதேவிக்கு தெரிந்த சக்கரவர்த்தி (35) என்பவரும் சேர்ந்துள்ளார்.
கழுத்தை இறுக்கி கொலைஇதையடுத்து கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5–ந் தேதி ஜெயவேலுவை, முனியம்மாள் அந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு முனியம்மாளும், சக்கரவர்த்தியும் சேர்ந்து ஜெயவேலுவை கட்டையால் தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் 3 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி ஜெயவேலுவை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி லதா தனது தீர்ப்பை வழங்கினார்.
இரட்டை ஆயுள் தண்டனைஅதில் ஜெயவேலுவை கொலை செய்த முனியம்மாள் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலைக்கு உடந்தையாக இருந்த துர்காதேவிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அதை தொடர்ந்து 3 பேரும் வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு பலத்த போலீஸ் காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.