கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, திட்டக்குடியில் கைது ‘கர்நாடக மாநில முன்னாள் மந்திரியை கடத்தி கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர்’
கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி, ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி திட்டக்குடியில் கைது செய்யப்பட்டார். கைதான ரவுடி, கர்நாடக மாநில முன்னாள் மந்திரியை கடத்தி கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர் ஆவார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு கடலூர் மாவட்ட
கடலூர்,
கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி, ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி திட்டக்குடியில் கைது செய்யப்பட்டார். கைதான ரவுடி, கர்நாடக மாநில முன்னாள் மந்திரியை கடத்தி கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர் ஆவார்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுகடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு டெல்டா சிறப்பு படைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் டெல்டா சிறப்புபிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான பிரபல ரவுடி கடலூர் வில்வநகரை சேர்ந்த ஞானமூர்த்தி(வயது 36) திட்டக்குடியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
திட்டக்குடியில் கைதுஇதையடுத்து தனிப்படை போலீசார் திட்டக்குடிக்கு விரைந்து சென்று ஞானமூர்த்தியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திட்டக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான ஞானமூர்த்தி தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப்படையின் முன்னாள் பொறுப்பாளர் ஆவார். கடந்த 2009–ம் ஆண்டு விருத்தாசலம் செந்தில் என்பவரை கொலை செய்த வழக்கு, ஆண்டி மடத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கு, 2014–ம் ஆண்டில் ராமநத்தத்தில் தங்கராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு ஆகிய வழக்குகள் இவர் மீது உள்ளன.
முன்னாள் மந்திரியை கொன்ற வழக்கில் தொடர்புடையவர்இந்த வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட இவர் ஜாமீனில் வெளிவந்த பின் தலைமறைவாகி விட்டார். மேலும் இவர் வீரப்பனுடன் சேர்ந்து கர்நாடக மாநில முன்னாள் மந்திரி நாகப்பாவை கடத்தி கொலை செய்த சம்பவத்திலும் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவரிடம் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்.