பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து மூலனூர் எண்ணெய் ஆலையில் சப்–கலெக்டர் ஆய்வு
மூலனூரில் இயங்கும் தனியார் எண்ணெய் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து அந்த எண்ணெய் ஆலைக்கு தாராபுரம் சப்–கலெக்டர் சென்று ஆய்வு செய்தார். தனியார் எண்ணெய் ஆலை மூலனூர் விநாயகர் நகரில் விக்னேஸ் ரீபைனரி ஆயில் மில் உள்ளது. இந்த ஆலை
மூலனூர்,
மூலனூரில் இயங்கும் தனியார் எண்ணெய் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து அந்த எண்ணெய் ஆலைக்கு தாராபுரம் சப்–கலெக்டர் சென்று ஆய்வு செய்தார்.
தனியார் எண்ணெய் ஆலைமூலனூர் விநாயகர் நகரில் விக்னேஸ் ரீபைனரி ஆயில் மில் உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விநாயகர் நகர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் மாசு படுவதாகவும், மேலும் அப்பகுதி மக்கள் காலரா, மூச்சுத்திணறல், சுவாச கோளாறுகள் உள்பட பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எண்ணெய் ஆலையின் கொதிகலன் வெடித்து சிதறியதில் கொதிகலன் பாகங்கள் பல மீட்டர் சுற்றளவில் விழுந்தது. இது போன்ற பல்வேறு காரணங்களால் அந்த எண்ணெய் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
சப்–கலெக்டர் ஆய்வுபொதுமக்களின் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நேற்று தாராபுரம் சப்–கலெக்டர் கிரேஷ்பச்சுவா மூலனூர் வந்து எண்ணெய் ஆலை அமைந்துள்ள விநாயகர் பொதுமக்களிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். பின்னர் எண்ணெய் ஆலைக்கு சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் சப்–கலெக்டர் கூறும்போது “ தனியார் எண்ணெய் ஆலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொது மக்களிடம் உறுதியளித்தார். அப்போது அவருடன் தாராபுரம் தாசில்தார் கிருஷ்ணவேணி, மூலனூர் நிலவருவாய் ஆய்வாளர் பங்கஜம் ஆகியோர் உடன் இருந்தனர்.