புதுக்கோட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை ஒரு மாதத்துக்குள் நீக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புதுக்கோட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை ஒரு மாதத்துக்குள் நீக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. போலி வாக்காளர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததா
மதுரை,
புதுக்கோட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை ஒரு மாதத்துக்குள் நீக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போலி வாக்காளர்கள்புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
புதுக்கோட்டை நகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒரே நபரின் பெயர் 2 முறை இடம் பெற்றுள்ளது. எனவே அதுபோன்ற போலி வாக்காளர்கள் பெயரை நீக்கிவிட்டு புதிய பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை கலெக்டர் மற்றும் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு குறித்து ஆய்வுசெய்து தகுதியில்லாதவர்களின் பெயர்களை நீக்கி, உண்மையான வாக்காளர்களின் பட்டியலை தயாரித்து நேர்மையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கலெக்டருக்கு உத்தரவுஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் புதுக்கோட்டை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை ஒரு மாதத்துக்குள் நீக்க வேண்டும் என்று கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.