போலீஸ் போல் நடித்து ஓய்வுபெற்ற பெண் துணை கலெக்டர் உள்பட 2 பேரிடம் நகைகள் அபேஸ் 3 பேருக்கு வலைவீச்சு


போலீஸ் போல் நடித்து  ஓய்வுபெற்ற பெண் துணை கலெக்டர் உள்பட 2 பேரிடம் நகைகள் அபேஸ் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 9:54 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் போல் நடித்து ஓய்வு பெற்ற பெண் கலெக்டர் உள்ளிட்ட 2 பேரிடம் நகைகள் அபேஸ் செய்த 3 பேருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கலவரம் மதுரை நியூ எல்லீஸ்நகர், சர்வோதயா 3–வது தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி வள்ளி(வயது 65), ஓய்வு பெற்ற ரெயி

மதுரை,

போலீஸ் போல் நடித்து ஓய்வு பெற்ற பெண் கலெக்டர் உள்ளிட்ட 2 பேரிடம் நகைகள் அபேஸ் செய்த 3 பேருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கலவரம்

மதுரை நியூ எல்லீஸ்நகர், சர்வோதயா 3–வது தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி வள்ளி(வயது 65), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று இவர் பை–பாஸ் ரோடு அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது டிப்–டாப் உடையணிந்த 3 பேர் அங்கு வந்து, தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் வள்ளியிடம் அந்த பகுதியில் கலவரம் நடக்கிறது. நீங்கள் தங்க நகையை அணிந்து சென்றால், அவர்கள் பறித்து சென்று விடுவார்கள். எனவே நகையை கொடுங்கள் காகிதத்தில் மடித்து தருகிறோம்.

வீட்டில் சென்று அணிந்து கொள்ளுங்கள் என்று கூறி அவரிடமிருந்து 4½ பவுன் நகையை வாங்கி காகிதத்தில் மடித்து கொடுத்தனர். அவரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அதில் நகைகள் இல்லாமல், சிறு கற்கள் தான் இருந்தன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 பேருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு பழங்காநத்தம் பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்தது. அதில் வேடசந்தூர், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜாத்தி(68), ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவர் பழங்காநத்தம் கூட்டுறவு வங்கியில் பணத்தை எடுத்து கொண்டு மாடக்குளம் ரோட்டில் நடந்து வந்தார். அப்போது 3 பேர் வழிமறித்து தங்களை போலீசார் என்று கூறினார். பின்னர் அவரிடம் முன்பு நடந்த சம்பவம் போன்று கூறி, ராஜாத்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை காகிதத்தில் மடித்து கொடுத்தனர். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது காகிதத்தில் நகையை காணவில்லை.

இதுகுறித்து அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். மதுரை நகரில் ஒரே நாளில் போலீஸ் போல் நடித்து பெண்களிடம் நகை பறித்த சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் நகையை திருடி சென்ற 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story