மன அழுத்தத்தை போக்க போலீசார் தங்களது குழந்தைகளுடன் பேசி மகிழ வேண்டும் பயிற்சி முகாமில் கலெக்டர் சங்கர் பேச்சு


மன அழுத்தத்தை போக்க போலீசார் தங்களது குழந்தைகளுடன் பேசி மகிழ வேண்டும் பயிற்சி முகாமில் கலெக்டர் சங்கர் பேச்சு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 22 Dec 2016 10:07 PM IST)
t-max-icont-min-icon

மன அழுத்தத்தை போக்க போலீசார் தங்களது குழந்தைகளுடன் பேசி மகிழ வேண்டும் என்று ஊட்டியில் நடந்த போலீசாருக்கான பயிற்சி முகாமில் கலெக்டர் சங்கர் கூறினார். பயிற்சி நீலகிரி மாவட்ட போலீசாருக்கான மேம்பாடு மற்றும் செயல்திறன் குறித்த பயிற்சி முகாம் ஊட்டி சிறுவர் ம

ஊட்டி,

மன அழுத்தத்தை போக்க போலீசார் தங்களது குழந்தைகளுடன் பேசி மகிழ வேண்டும் என்று ஊட்டியில் நடந்த போலீசாருக்கான பயிற்சி முகாமில் கலெக்டர் சங்கர் கூறினார்.

பயிற்சி

நீலகிரி மாவட்ட போலீசாருக்கான மேம்பாடு மற்றும் செயல்திறன் குறித்த பயிற்சி முகாம் ஊட்டி சிறுவர் மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா முன்னிலை வகித்தார். கலெக்டர் சங்கர் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:–

அரசு துறைகளில் உள்ளவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக போலீசார் இந்த மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் போலீசாருக்கு வார விடுமுறை என்பது கிடையாது.

பணிச்சுமை

இதுதவிர தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட விடுமுறை எடுக்காமல் அதிக பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனர். போலீஸ் துறை என்பது பிராண வாயுவை போன்றது. பிராண வாயு இல்லையென்றால் நாம் வாழ முடியாது. அதுபோல் போலீசார் இல்லையென்றால் சமூகத்தில் அமைதி இருக்காது.

இதனால் தான் நம்முன்னோர்கள் மக்கள் பணி என்பது மகேசன் பணி என்பர். அதற்கு எடுத்து காட்டு காவல் பணியாகும். போலீஸ் துறையில் உள்ளவர்களுக்கு தங்களது குழந்தைகளிடம் பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் பணியாற்றுவார்கள்.

பேச வேண்டும்

எனவே போலீசார் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க வேண்டும். இதற்கு தங்களது குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி பேசி மகிழ வேண்டும். மனைவி, குழந்தைகளுடன் மனம் விட்டு பேசும்போது மன அழுத்தம் குறையும்.

ஒரு பணியினை செய்ய நம்மை உடல் அளவிலும், மனதளவிலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கடினமான வேலையையும் திறவையாக எடுத்து செய்ய வேண்டும். பணியை சுமையாக கருதினால், அது சுமையாக தெரியும். பணியை கடமையாக கருதினால் எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு மணிகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story