நீலகிரி மாவட்டத்தில் வறட்சி: ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் கவலை
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பழங்கள் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காய்கறிகள், கொய்மலர்கள் இவற்றிற்கு அடுத்தபடியாக பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பழங்கள்நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காய்கறிகள், கொய்மலர்கள் இவற்றிற்கு அடுத்தபடியாக பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு நீலகிரி ஆப்பிள், ஆரஞ்சு, பிளம்ஸ், பிச்சீஸ், பெர்சிமன், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் விளைவிக்கப்படுகிறது.
இந்த பழங்களை பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் பழங்களை அறுவடை செய்யும் விவசாயிகள் அவற்றை விற்பனைக்காக ஊட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். பின்னர் அவைகளை கேரளா, கோவை உள்ளிட்ட இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
வறட்சிநீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாகவும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டது. பெரும்பாலான அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், கோத்தகிரி, கட்டபெட்டு, மைனலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரி பழ செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் வறட்சி காரணமாக ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விளைச்சல் இல்லைஇது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–
வறட்சியால் ஸ்ட்ராபெர்ரி செடிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த செடிகளுக்கான நாற்றுகளும் எளிதாக கிடைப்பது இல்லை. தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து நாற்றுகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது வறட்சி காரணமாக 30 சதவீதம் அளவுக்கு கூட ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் இல்லை. இதனால் நஷ்டம் ஏற்படும் உள்ளது. எனவே விவசாயிகளை பாதுகாக்க ஸ்ட்ராபெர்ரி நாற்றுகளை அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.