ஆண்டிப்பட்டி பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்தது உற்பத்தியாளர்கள் கவலை
ஆண்டிப்பட்டி பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். செங்கல் உற்பத்தி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இ
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
செங்கல் உற்பத்திதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் பலரும் விவசாய தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். விவசாய நிலங்களும் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்லுக்கு நல்ல கிராக்கி இருந்தது. எனவே ஒரு சிலர் விவசாயத்தை கைவிட்டு செங்கல்சூளை நடத்த ஆரம்பித்தனர். ஆனால் தற்போது ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி, கோத்தனூத்து, மறவபட்டி, குப்பாம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, ராஜக்காள்பட்டி, பாலக்கோம்பை, அழகாபுரி உள்பட பல்வேறு கிராமங்களில் புற்றீசல் போல ஏராளமான செங்கல்சூளைகள் உருவாக்கப்பட்டன.
விலை குறைந்ததுஇங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல் தேனி மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் தற்போது தேக்க நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்ட செங்கல், தற்போது ரூ.3.50–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் செங்கல்சூளை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை கூட பெற முடியாமல் திண்டாடி வருகிறார்கள். 50 ஆயிரம் செங்கல் இறக்க 17 டன் விறகு தேவைப்படுகிறது. ஒரு டன் விறகு ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செம்மண், வண்டல், கறம்பை, மணல் ஆகியவற்றை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. தொழிலாளர்கள் சம்பளம், செட் அமைப்பது உள்பட உற்பத்தி செலவு அதிகமாவதால் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் உரிமையாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
விலை நிர்ணயம்மேலும் பலரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் லட்சக்கணக்கான செங்கல்கள் தேக்கமடைந்துள்ளது. அரசு சார்ந்த கட்டிடப்பணிகளுக்கு விலை நிர்ணயம் செய்து, கூட்டுறவு சங்க அடிப்படையில் கொள்முதல் செய்தால் செங்கல்சூளை நடத்துபவர்கள் பயன் அடைவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.