வடமதுரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் அரசு பஸ் சிறைபிடிப்பு
வடமதுரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர். குடிநீர் தட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பாடியூரில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வ
வடமதுரை,
வடமதுரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர்.
குடிநீர் தட்டுப்பாடுதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பாடியூரில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் குறைந்தழுத்த மின்சாரம் வினியோகமானதால், மின்மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பாடியூர் கிராமத்திற்கு வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று பாடியூர் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வடமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.