கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுப்பதற்காக ரூ.37 லட்சம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த 3 பேர் கைது
கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுப்பதற்காக, ரூ.37 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவல் எர்ணாகுளம் நகர்ப்பகுதியை சேர்ந்த 3 பேர், கமிஷன் பெற்றுக்கொண்டு மத்திய அரசால்
எர்ணாகுளம்,
கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுப்பதற்காக, ரூ.37 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்எர்ணாகுளம் நகர்ப்பகுதியை சேர்ந்த 3 பேர், கமிஷன் பெற்றுக்கொண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் பணத்தை தங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் 37 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின்னர் அந்த வீட்டில் இருந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கமிஷன் பெற்றுக்கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது.
கைதுஇதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 3 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு யாரிடமிருந்து அந்த பணம் கிடைத்தது.
பழைய ரூபாய் நோட்டுகளை அவர்கள் யாரிடம் கொடுக்கின்றனர். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடியும் வரை கைதானவர்களின் பெயர் விவரங்களை வெளியிட இயலாது என்றனர்.