கோவையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ.41 ஆயிரம் மோசடி மகளின் பிரசவ செலவுக்காக சேர்த்து வைத்த பணம் பறிபோன பரிதாபம்
கோவையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ.41 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு உள்ளதால் மகளின் பிரசவ செலவுக்காக சேர்த்து வைத்த பணம் பறிபோனது. கூலித்தொழிலாளி கோவை சாய்பாபாகாலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 47), கூலித்தொழிலாளி.
கோவை,
கோவையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண்ணிடம் ரூ.41 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு உள்ளதால் மகளின் பிரசவ செலவுக்காக சேர்த்து வைத்த பணம் பறிபோனது.
கூலித்தொழிலாளிகோவை சாய்பாபாகாலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 47), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நாகமணி (43). இவரும் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார்.
எனவே மகளின் பிரசவ செலவுக்காக நாகமணி கூலிவேலை செய்து, சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி அதில் டெபாசிட் செய்து வைத்திருந்தார். அவரிடம் ஏ.டி.எம். கார்டு வசதியும் உள்ளது.
ரூ.41 ஆயிரம்இதற்கிடையே, நேற்று காலை நாகமணியின் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில் தான் வங்கி அதிகாரி என்றும், உங்களின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை கூறுங்கள், நாங்கள் வேறு எண் கொடுக்கிறோம் என்று கூறி உள்ளார்.
அதை நம்பிய நாகமணி, தனது ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணையும், அதன் பின்னர் அவருடைய செல்போனுக்கு வந்த ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் கூறி உள்ளார். உடனே அவரு டைய செல்போனுக்கு ரூ.41 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாக குறுஞ்செய்தி வந்தது.
பீகாரை சேர்ந்த ஆசாமிமகளின் பிரசவ செலவுக்காக வைத்திருந்த பணம் பறிபோனதால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், வங்கி யில் இருந்து யாரும் பேசவில்லை, யாரோ மர்ம ஆசாமி வங்கி அதிகாரி பேசுவதுபோன்று பேசி, உங்களிடம் ரகசிய எண்ணை பெற்று வங்கி கணக்கில் இருந்து ரூ.41 ஆயிரத்தை எடுத்துவிட்டதாக தெரிவித்தனர்
இந்த நூதன மோசடி குறித்து நாகமணி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், பீகார் மாநிலத்தில் இருந்து பேசிய மர்ம ஆசாமி, நாகமணியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை வாங்கியதும், ஆன்லைன் மூலம் மர்ம ஆசாமி, 5 நிமிடத்துக்குள் 5 முறையாக ஆன்லைன் மூலம் பணத்தை எடுத்ததும் தெரியவந்தது.
உஷாராக இருக்க வேண்டும்இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ‘வங்கிகளில் இருந்து யாரும் பேசி ஏ.டி.எம். ரகசிய எண்ணை கேட்பது இல்லை. அப்படி கேட்டாலும் யாரும் கொடுக்கக்கூடாது. இந்த விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருந்தால்தான் மோசடி நடக்காது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடி ஆசாமிகளிடம் சிக்கி ஏமாறக்கூடாது‘ என்றனர்.