பணத்தட்டுப்பாட்டால் புதிய கட்டிட பணிகள் மந்தம்: விற்பனை குறைந்ததால் தேங்கி கிடக்கும் செங்கல்கள் தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு இடம் பெயரும் அவலம்
துடியலூர், பணத்தட்டுப்பாட்டால் புதிய கட்டிட பணிகள் மந்தமாக உள்ளதால் செங்கல் விற்பனை குறைந்துள்ளது. இதனால் சூளைகளில் செங்கல்கள் தேங்கி கிடக்கின்றன. செங்கல் தொழிலாளர்களும் மாற்று தொழிலை தேடி சென்று உள்ளனர்.
துடியலூர்,
பணத்தட்டுப்பாட்டால் புதிய கட்டிட பணிகள் மந்தமாக உள்ளதால் செங்கல் விற்பனை குறைந்துள்ளது. இதனால் சூளைகளில் செங்கல்கள் தேங்கி கிடக்கின்றன. செங்கல் தொழிலாளர்களும் மாற்று தொழிலை தேடி சென்று உள்ளனர்.
செங்கல் சூளைகள்
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் தற்போது பல்வேறு தொழில்கள் முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. அதில் ஒன்று தான் செங்கல் தொழில். கோவையை அடுத்த சின்னதடாகம், கணுவாய், நஞ்சுண்டபுரம், பெரியதடாகம், மாங்கரை, நெ.24 வீரபாண்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்து, வேலை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக 3 ஆயிரம் செங்கல்கள் ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் செங்கல் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
வேலை இழப்பு
நாங்கள் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு லாரிகளில் செங்கல் அனுப்பி வைக் கிறோம். தற்போது பெரும்பாலான பகுதிகளில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு செங்கல்களை பயன்படுத்துவது குறைந்து விட்டது. இதன் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு முன்பு போல் செங்கல் ஆர்டர்கள் கிடைப்பதில்லை.
செங்கல் சூளையில் ஆர்டர் கிடைக்காத காரணத் தால் செங்கல் உற்பத்தியை நிறுத்தும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இந்த நிலையில் தற்போது பணத்தட்டுப்பாடு காரணத்தாலும் புதிய கட்டிட பணிகள் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் உற்பத்தியாளர்களாகிய எங்களிடம் செங்கல் ஆர்டர் பெற்று சென்றவர்கள் மீதி பணத்தை தராததால் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல தொடங்கி விட்டனர். கடந்த ஆண்டு கோவை, நீலகிரி, திருப்பூர் பகுதிகளுக்கு 200 லாரிகளில் செங்கல்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 30 லாரிகளில் செங்கல்கள் ஏற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. புதிய கட்டிட பணிகள் குறைந்து வருவதாலும், விற்பனை இல்லாததாலும் செங்கல் சூளைகளில் உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்கள் தேங்கி கிடக்கின்றன. மேலும் அவ்வப்போது செங்கல் சூளைகளுக்குள் புகுந்து காட்டுயானைகளும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல் விற்பனை குறித்து கட்டுமான பொறியாளர் செந்தில்குமார் கூறியதாவது:-
வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவு
தமிழக அரசின் புதிய நில வழிகாட்டி மதிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற மனைகளை பதிவு செய்தல் உள்ளிட்ட காரணங்களால் புதிதாக வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. தற்போது செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால் கடந்த சில மாதங்களாக புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து உள்ளனர். மேலும் இதை நம்பி உள்ள மற்ற தொழில்களும் முடங்கும் அபாய நிலை உள்ளது.
மேலும் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் சிமெண்ட் கலவையால் செய்யப்பட்ட செங்கல்கள், ஹாலோ பிளாக் உள்ளிட்ட கற்களை பயன்படுத்த தொடங்கி விட்டதால் செங்கல் பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது. இதுவும் செங்கல் உற்பத்தி குறைய ஒரு காரணம்.

Next Story