இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்– பரபரப்பு தகவல்கள்
இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாயின. காதல் திருமணம் நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுர
இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாயின.
காதல் திருமணம்நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரத்தை அடுத்த வீரணாஞ்சேரியைச் சேர்ந்தவர் பெருமாள். மின்வாரியத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 30). இவரும், பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (28) என்ற பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு விஜயா (9), திவ்யா (8) ஆகிய இரண்டு மகள்களும், வெங்கடேஷ் (4) என்ற மகனும் இருந்தனர்.
வீட்டில் வளர்ந்து வந்த மாடு ஒன்றை மகாலட்சுமி விற்றார். அதன்மூலம் கிடைத்த பணத்தை மகாலட்சுமி வைத்து இருந்தார். இந்த பணத்தை கேட்டு விஜயகுமார் தகராறு செய்து வந்தார். நேற்று காலையில் கணவன்– மனைவி இடையே மாடு விற்ற பணம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலட்சுமி, கணவருடன் வாழ்வதை விட தன்னுடைய குழந்தைகளுடன் சாவது மேலானது என்று முடிவெடுத்தார். அதற்காக அங்குள்ள ஒரு கடையில் வாழைப்பழங்கள் மற்றும் தோட்டத்துக்கு பயன்படுத்துவதற்கு என்று குருணை மருந்தை வாங்கிக் கொண்டார். தன்னுடைய 3 குழந்தைகளுடன் விஜய அச்சம்பாடு காட்டுப்பகுதிக்கு சென்றார்.
குழந்தைகளுக்கு கொடுத்தார்அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து மனதை கல்லாக்கிக் கொண்டு வாழைப்பழத்தில் குருணை மருந்தை வைத்து 3 பிள்ளைகளுக்கும் கொடுத்தார். இதில் சிறுமி திவ்யா மட்டும் தாய் கொடுத்தவுடன் மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கி மளமளவென சாப்பிட்டு விட்டார். ஆனால் இன்னொரு மகள் விஜயா, மகன் வெங்கடேஷ் ஆகிய இருவரும் சாப்பிட மறுத்து விட்டனர். பிள்ளைகளுக்கு கொடுத்த அடுத்த நிமிடமே மகாலட்சுமியும் குருணை மருந்துடன் வாழைப்பழத்தை சாப்பிட்டார்.
சிறிது நேரத்தில் மகாலட்சுமியும், திவ்யாவும் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயா உடனே தன்னுடைய தாயின் செல்போனை எடுத்து தந்தை விஜயகுமாருக்கு தகவல் சொன்னார்.
தாய்– மகள் சாவுசம்பவ இடத்துக்கு விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு மனைவி வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். மகள் திவ்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். தான் வந்த மோட்டார் சைக்கிளிலேயே திவ்யாவை தூக்கி போட்டுக் கொண்டு இட்டமொழியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே திவ்யா பரிதாபமாக இறந்தாள். மகளின் உடலை பார்த்து கதறி அழுத விஜயகுமார், அங்கிருந்து திவ்யாவின் உடலை எடுத்துக் கொண்டு மனைவி பிணமாக கிடந்த இடத்துக்கு வந்தார். அங்கு மனைவியின் உடலுக்கு அருகில் மகளின் உடலை வைத்தார்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த உடன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், மதிபால், சுப்பிரமணியன், பிரமையா மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பரபரப்பு தகவல்கள்மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–
மகாலட்சுமியும், விஜயகுமாரும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மகாலட்சுமி தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பை மீறி விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு மகாலட்சுமி தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார். ஆரம்பத்தில் வேலைக்கு சென்று வந்த விஜயகுமார் நாளடைவில் மதுகுடித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குழந்தைகள் இல்லம்கணவர் எந்த உழைப்பும் இல்லாமல் இருக்கிறார். நாம் எப்படியாவது பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்த மகாலட்சுமி, மகள்கள் விஜயா, திவ்யா ஆகிய இருவரையும் விஜய அச்சம்பாட்டில் உள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார். அதுவும் அங்குள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிப்பதற்கு ஏற்பாடும் செய்து இருந்தார். மகன் வெங்கடேசை மட்டும் தன்னுடன் வளர்த்து வந்தார்.
இந்தநிலையில்தான் மாடு விற்று மகாலட்சுமி வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை கேட்டு விஜயகுமார் தகராறு செய்தார். ஏற்கனவே உழைத்து உழைத்து சேமித்த பணத்தை எல்லாம் விஜயகுமார் மதுகுடித்தே அழித்து வந்ததாக தெரிகிறது.
துயர முடிவுபெற்றோர் வீட்டிலும் ஆதரவு இல்லை. காதலித்து திருமணம் செய்த கணவரும் இப்படி மதுகுடித்து விட்டு பொறுப்பு இல்லாமல் இருக்கிறார் என மன வேதனையில் இருந்தார். நேற்று காலை 11 மணி அளவில் வடக்கு அச்சம்பாட்டுக்கு சென்றார். அங்கு பள்ளிக்கூடத்தில் இருந்த தன்னுடைய மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று இந்த துயர முடிவை எடுத்ததாக தெரிகிறது.