மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு விழுப்புரத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் பயணம்


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு விழுப்புரத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் பயணம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 22 Dec 2016 11:04 PM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு விழுப்புரத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேல்மருவத்தூர் பயணம் மார்கழி மாதம் பிறந்தவுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மேல்ம

விழுப்புரம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு விழுப்புரத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேல்மருவத்தூர் பயணம்

மார்கழி மாதம் பிறந்தவுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்வது வழக்கம்.

தற்போது மார்கழி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமான ஆண்களும், பெண்களும் செவ்வாடை அணிந்தபடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வழக்கத்திற்கும் மாறாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இருந்தும், விழுப்புரம் நாராயணன் நகர் சக்தி பீடம் மற்றும் வண்டிமேடு சக்தி மன்றம் ஆகியவற்றில் இருந்தும் ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து மேல்மருவத்தூருக்கு புறப்பட்டுச்சென்றனர். இதில்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இருந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள் ஊர்வலமாக விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ரெயில் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story