ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 45½ பவுன் நகைகள், பணம் கொள்ளை
மதுரை கண்ணனேந்தல், பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கையா(வயது 60), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ
மதுரை,
மதுரை கண்ணனேந்தல், பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கையா(வயது 60), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்து 45½ பவுன் நகைகள், வெள்ளி குத்துவிளக்கு, கொலுசு மற்றும் 3000 ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story