பெரும்பாறை பகுதியில் மிளகு செடிகளில் மெதுவாடல் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
பெரும்பாறை பகுதியில் மிளகு செடிகளில் மெதுவாடல் நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மிளகு சாகுபடி திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், கும்பரையூர், மங்களம்கொம்பு, குப்பமாள்ப
பெரும்பாறை,
பெரும்பாறை பகுதியில் மிளகு செடிகளில் மெதுவாடல் நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மிளகு சாகுபடிதிண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், கும்பரையூர், மங்களம்கொம்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு போன்ற கீழ்பழனி மலைப்பகுதிகளில் மிளகு சாகுபடி அதிகம் நடைபெற்று வருகிறது.
மிளகு வாசனைப் பயிர்களிடையே தனிசெல்வாக்குடையது. இந்த மிளகு பயிரை கீழ்பழனி மலை, சிறுமலை மற்றும் மேகமலைப்பகுதியில் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
மெதுவாடல் நோய் தாக்குதல்மிளகு செடிகளில் அவ்வப்போது பல நோய்கள் தாக்கி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால், பெரும்பாறை பகுதியில் கீழ்பழனி மலையில் மிளகு செடிகளில் மெதுவாடல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இந்த நோய் தாக்கிய மிளகு செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன.
நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறிய பின் உதிர்ந்து விடுகின்றன. இதன் காரணமாக மிளகு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் மிளகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.