சின்னமனூர் பகுதியில் விளையும் செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


சின்னமனூர் பகுதியில் விளையும் செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Dec 2016 11:42 PM IST (Updated: 22 Dec 2016 11:42 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் பகுதியில் விளையும் செங்கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். செங்கரும்பு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை விளங்குகிறது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது செங்கரும்ப

சின்னமனூர்,

சின்னமனூர் பகுதியில் விளையும் செங்கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

செங்கரும்பு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை விளங்குகிறது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது செங்கரும்பு தான். இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் செங்கரும்புகள் பயிர் செய்யப்பட்டு, ஆண்டுதோறும் தமிழகத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கும், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சின்னமனூர் பகுதியில் விளையக்கூடிய கரும்புகளுக்கு தனி சுவை இருப்பதால் கரும்பு வாங்குவதற்காக வியாபாரிகளின் வருகை ஆண்டு தோறும் அதிக அளவில் காணப்படும்.

தண்ணீர் பற்றாக்குறை

இந்த நிலையில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தாலும், முல்லைப்பெரியாற்றில் போதிய தண்ணீர் இல்லாததாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரும்பு விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இதனை அறிந்த விவசாயிகள், அருகில் உள்ள குளம் மற்றும் கிணறுகளில் உள்ள தண்ணீரை வீணாக்காமல் முறையாக பயன்படுத்தியும், தண்ணீரை விலை கொடுத்து வாங்கியும், இயற்கை உரங்களை பயன்படுத்தியும் கரும்பு பயிரை வளத்துள்ளனர். தற்போது செங்கரும்புகள் 5 அடி முதல் 7அடிவரை நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. கடந்த ஆண்டு 10 கரும்பு கொண்ட கட்டு ஒன்று ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசு கொள்முதல்

கடந்த பொங்கல் பண்டிகையின் போது முதல்–அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழக அரசே கரும்புகளை கொள்முதல் செய்தது. இதேபோன்று இந்த ஆண்டும் தமிழக அரசே முன்வந்து கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story