சேலம் கோர்ட்டில் விசாரணையின் போது குற்றப்பத்திரிகை நகலை கிழித்து எறிந்த கைதியால் பரபரப்பு


சேலம் கோர்ட்டில் விசாரணையின் போது குற்றப்பத்திரிகை நகலை கிழித்து எறிந்த கைதியால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 12:55 AM IST (Updated: 23 Dec 2016 12:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோர்ட்டில் விசாரணையின் போது குற்றப்பத்திரிகை நகலை கிழித்து எறிந்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலை முயற்சி சேலம் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 39). கொலை வழக்கு ஒன்று தொடர்பாக இவரை கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் 15–ந் தேதி அன்னதா

சேலம்,

சேலம் கோர்ட்டில் விசாரணையின் போது குற்றப்பத்திரிகை நகலை கிழித்து எறிந்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி

சேலம் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 39). கொலை வழக்கு ஒன்று தொடர்பாக இவரை கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் 15–ந் தேதி அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 29–ந் தேதி பழனிசாமி சிறையில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு சண்முகபிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றப்பத்திரிகை நகல்

விசாரணைக்காக பழனிசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடந்து கொண்டிருந்த போது அவருக்கு இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அப்போது பழனிசாமி திடீரென இந்த நகலை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கிழித்து எறிந்தார். மேலும் அவர், என்னை வாழ விடமாட்டீர்கள், சாகவும் விடமாட்டீர்கள் என்ற கூறி பயங்கரமாக சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கைதி பழனிசாமியை சிறையில் வைத்து மனநல டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்ய போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு(சனிக்கிழமை) தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


Next Story