காவேரிப்பட்டணம் அருகே மினிலாரி மீது வேன் மோதி விபத்து


காவேரிப்பட்டணம் அருகே மினிலாரி மீது வேன் மோதி விபத்து
x
தினத்தந்தி 23 Dec 2016 1:01 AM IST (Updated: 23 Dec 2016 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் இருந்து நேற்று இரவு அய்யப்ப பக்தர்கள் 15–க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் வந்தனர். இந்த வேன் நேற்று முன்தினம் நள்ளிரவு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் மேம்பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னால் வி

காவேரிப்பட்டணம்,

வேலூர் மாவட்டத்தில் இருந்து நேற்று இரவு அய்யப்ப பக்தர்கள் 15–க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் வந்தனர். இந்த வேன் நேற்று முன்தினம் நள்ளிரவு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் மேம்பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னால் விறகு பாரம் ஏற்றிக்கொண்டு மினிலாரி சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் திடீரென மினிலாரியின் டயர் வெடித்தது. பின்னர் அந்த மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்போது பின்னால் அய்யப்ப பக்தர்கள் வந்த வேன், மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், மினிலாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். மேலும் மினிலாரியில் இருந்த விறகுகள் நடுரோட்டில் சிதறிக்கிடந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கிரேன் மூலம் மினிலாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story