ரெயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,
ரெயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலனுக்கு எதிரான செயல்
இந்தியாவில் ரெயில் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான முன்னறிவிப்பை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வெளியிட்டிருக்கிறார். ரெயில் கட்டணத்தை உயர்த்துவதற்காக அவர் கூறியுள்ள காரணங்கள் நியாயமற்றவை. அவற்றில் ஒன்றைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.
பா.ஜ.க. அரசு பதவியேற்று 2½ ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் 2014 ஜூன், 2015 ஜூன், 2016 செப்டம்பர் என 3 முறை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சிறப்பு ரெயில்களுக்கு முன்பு வழக்கமான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது கூட்டத்திற்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்படுகிறது. இவ்வளவுக்கு பிறகும், ஏதோ சேவை வழங்குவதாகக் கூறி கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவது மக்கள் நலனுக்கு எதிரான செயல் ஆகும்.
மத்திய அரசு திட்டம்
இப்போதும் கூட ரெயில் பயணிகளுக்கு மத்திய அரசு எந்த விதமான கூடுதல் வசதிகளையோ, சேவைகளையோ வழங்கப்போவதில்லை. மாறாக கடந்த பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பயணிகள் பாதுகாப்பு குறித்த சில திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
பாதுகாப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு ரூ.1,19,183 கோடி நிதியுதவி வழங்கும்படி மத்திய நிதி அமைச்சகத்தை ரெயில்வே அமைச்சகம் கோரியிருந்தது. ஆனால், அதில் 25 சதவீதத்தை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்ட நிதித்துறை மீதமுள்ள பணத்தை கட்டண உயர்வின் மூலம் திரட்டிக் கொள்ளும்படி கூறிவிட்டது. அதன்படி தான் ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.
கைவிட வேண்டும்
அதிலும் உயர்வகுப்புக் கட்டணங்கள் கடந்த காலங்களில் அதிகமாக உயர்த்தப்பட்டதைக் காரணம் காட்டி இம்முறை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் 2-ம் வகுப்பு இருக்கை வசதி, படுக்கை வசதி ஆகியவற்றுக்கான கட்டணங்கள் தான் உயர்த்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே ஏழைகளுக்கு பாதகமாகவும், பணக்காரர்களுக்கு சாதகமாகவும் தான் அமைந்துள்ளன. மேடுகளை கரைத்து பள்ளங்களை நிரப்புவது தான் சிறந்த பொருளாதாரமாகும். ஆனால், மத்திய அரசின் செயல்பாடுகள் இதற்கு நேர் எதிராக உள்ளன. இது நல்லதல்ல. எனவே, ரெயில் கட்டணங்களை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Next Story