வார்தா புயல் தாக்கம் மின்சாரம் வழங்காததால் மாணவ- மாணவிகள் அவதி

மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது நெம்மேலி அரசினர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 12-ந்தேதி ஏற்பட்ட வார்தா புயலில் இந்த பள்ளி வளாகத்தில் நின்ற 2 மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதுநாள் வரை பொதுப்பணித்துறையினர் இந்த மரத்தை அப்புறப் படுத்த வில்லை. இந்த மரங்கள் காய்ந்து போன நிலையில் பள்ளி வளாகத்தில் இடைஞ்சலாக உள்ளது. இந்த பள்ளிக்கு மின்சார இணைப்பு வழங்கும் வகையில் பள்ளி வளாகத்திற்குள் ஒரு மின்கம்பம், பள்ளி வளாகத்திற்கு வெளியே ஒரு மின்கம்பம் என்று 2 மின்கம்பங்கள் நின்றன. அந்த 2 மின்கம்பங்களும் வார்தா புயலால் சேதம் அடைந்தன. மின்கம்பிகளும் அறுந்தன. அதற்கு பின்னர் இன்னும் அந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட வில்லை.
இதனால் இந்த பள்ளியில் உள்ள குடிநீர் மோட்டார் இயங்கவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குடிப்பதற்கும், கழிப்பறைக்கு செல்வதற்கும் தண்ணீர் வசதி இன்றி கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மின்சாரம் இன்று வரும், நாளை வரும் என்று கூறுகின்றனர், இதுவரை வந்தபாடில்லை என்று இந்த பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் வருத்தத்துடன் கூறுகின்றனர். எனவே கோவளம் மின்வாரிய நிர்வாகம் சாய்ந்த மின்கம்பங்களை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று மாணவ-மாணவிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story