பொன்னேரி அருகே வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


பொன்னேரி அருகே வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:16 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

பொன்னேரி,

பொன்னேரி அருகே வங்கியில் பணம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கியில் பணம் இல்லை

பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் ஏராளமானோர் வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். ரூ.1,000, ரூ.500் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் இந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை எடுப்பதற்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வங்கி திறந்ததும் வங்கியில் பணம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறியல்

காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், இந்த வங்கி பணக்காரர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்வோருக்கும் உதவி புரிவதாக குற்றம் சாட்டி வங்கியின் முன்னால் பழவேற்காடு- பொன்னேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் விடப்பட்டன. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, வங்கி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Next Story