ராமமோகன ராவின் மகன் நண்பர் வீட்டில் ரூ.30 லட்சம் சிக்கியது வக்கீல் அமலநாதன் வீட்டில் நடந்த சோதனை பற்றி பரபரப்பு தகவல்

சென்னை,
ராமமோகன ராவ் மகன் விவேக்கின் நண்பர் வக்கீல் அமலநாதன் சொகுசு பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் மற்றும் பழைய நோட்டுகள் சிக்கின.
26 மணிநேரம் சோதனை
தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த ராமமோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி சொத்து ஆவணங்கள், தங்கம், முக்கிய கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனை நேற்று முன்தினம் காலை 5.30 மணி முதல் நேற்று காலை 6.45 மணி வரை 26 மணி நேரம் வரை நடந்தது.
ஆவணங்கள்
நேற்று காலை 6.45 மணியளவில் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களுடைய சோதனையை முடித்தவுடன், கட்டை பைகளில் ஆவணங்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
தலைமைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டவுடன், இவரது வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வருமான வரி சோதனையின் போது பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்த துணை ராணுவ வீரர்களும் புறப்பட்டு சென்றனர்.
வளசரவாக்கம்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராமமோகன ராவின் மகன் விவேக்கின் நெருங்கிய நண்பரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான அமலநாதனின் சொகுசு பங்களாவிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
வளசரவாக்கம் இந்திரா நகரில் உள்ள அமலநாதனின் பங்களாவில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பிரேமா தலைமையில் 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதனடிப்படையில் பணம் எண்ணும் 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணியில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் புதிய 2 ஆயிரம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகள் என்று தெரியவந்துள்ளது.
மனைவியிடம் விசாரணை
அதனடிப்படையில் எப்படி இவ்வளவு பணம் உங்களுக்கு கிடைத்தது? என்ற கோணத்தில் விசாரிப்பதற்காக வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அமலாநாதனின் மனைவி டாக்டர் சரண்யாவை அழைத்துச்சென்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வக்கீல் அமலநாதனையும் வங்கிக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தது. தொடர்ந்து அமலநாதனின் சொகுசு பங்களாவில் இருந்து தங்க நகை, ஹார்ட் டிஸ்க், கம்யூட்டர், பென் டிரைவர், ஒப்பந்தங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், கோப்புகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
மின்சார கம்பி - கண்காணிப்பு கேமரா
இந்த சொகுசு பங்களாவில் வெளி ஆட்கள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, மதில் சுவர் மீது மின்சார கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை அமலநாதன் பொருத்தி உள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, ‘இந்த பங்களாவுக்கு அடிக்கடி அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வார்கள். இதனால் இந்த பங்களாவில் என்ன நடக்கிறது? என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் விரைவில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பது மட்டும் எங்களுக்கு தெரியும். அது தற்போது நடந்து இருக்கிறது’ என்றனர்.
வக்கீல்கள் குவிந்தனர்
இந்தநிலையில் வக்கீல் அமலநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் தகவலறிந்து, அவருடன் பணியாற்றும் சக வக்கீல்கள் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். வக்கீல் அமலநாதன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருக்கிறார். விவேக்கின் சட்ட ஆலோசகராகவும் அமலநாதன் இருந்துள்ளார்.
அமலநாதன் வீட்டில் சோதனையை முடித்து மதியம் 4.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கார்களில் புறப்பட்டனர்.
அப்போது அவர்களிடம் அமலநாதன் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், தற்போது சோதனை முடிந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன? என்பது பற்றி வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளுங்கள்.
சென்னையை பொறுத்தமட்டில் நேற்று நடந்த சோதனையில் ரூ.30 லட்சம் ரொக்கமும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தாலும் வக்கீல் அமலநாதன் வீட்டில் ரூ.200 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என்று பேசப்பட்டது.
வனத்துறை அதிகாரி
தமிழக வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கல்யாண சுந்தரம். இவரது வீடு சென்னை கோடம்பாக்கம் யூனைடெட் இந்தியா காலனி 2-வது குறுக்கு தெருவில் உள்ளது.
இவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து அவரது வீட்டுக்கு செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் சென்றபோது, அவர்களுடைய வீட்டில் இருந்தவர்கள் இங்கு சோதனை எதுவும் நடக்கவில்லை. நீங்கள் போய் வாருங்கள் என்று கூறினர்.

Next Story