புதிய 2 ஆயிரம் ரூபாய் பதுக்கல் வழக்கில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேர் கைது சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு

சென்னை,
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பதுக்கல் வழக்கில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஜனவரி 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொழில் அதிபர் கைது
சென்னை தி.நகரை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. தொழில் அதிபரான இவரது வீட்டில் கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, அவரது வீட்டில் ஏராளமான பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் கூட்டுச்சதி, மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், இந்த வழக்கில் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி சீனிவாசலு ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் 3 பேர் கைது
இந்த நிலையில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ஆடிட்டர் பிரேம்குமார், ரத்தினம் என்ற திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சேகர்ரெட்டிக்கு உறுதுணையாக இருந்ததாக சி.பி.ஐ. போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதில், திண்டுக்கல் ரத்தினம், கிராம நிர்வாக அதிகாரியாக முதலில் பணியாற்றி, வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர். பின்னர் அப்பதவியில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது. இவரும், முத்துப்பேட்டை ராமச்சந்திரனும், சேகர்ரெட்டி வெளியூரில் எடுத்துள்ள மணல் குவாரி ஒப்பந்த பணிகளை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜாமீன் மனு
கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. முதன்மை செசன்சு கோர்ட்டில் நேற்று காலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
அவர்களை ஜனவரி 4-ந் தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
இதன்பின்னர், கைது செய்யப்பட்ட 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த மனுக்களை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்.
அனுமதி கேட்டு மனு
இதன்பின்னர், இந்த 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவையும் இன்று விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
முதல் வகுப்பு வழங்க கோரிக்கை
இதற்கிடையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் சிறையில் தங்களுக்கு முதல் வகுப்பு வழங்கக்கோரி சி.பி.ஐ. முதன்மை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை நீதிபதி விஜயலட்சுமி விரைவில் விசாரிக்க உள்ளார்.

Next Story