கூடுதல் அரிசி வழங்காததை கண்டித்து ரேஷன் கடை முன்பு பா.ஜனதா ஆர்ப்பாட்டம் கடைக்கு பூட்டுபோட்டதால் பரபரப்பு


கூடுதல் அரிசி வழங்காததை கண்டித்து ரேஷன் கடை முன்பு பா.ஜனதா ஆர்ப்பாட்டம் கடைக்கு பூட்டுபோட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:17 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் அரிசி வழங்காததை கண்டித்து ரேஷன் கடை முன்பு பா.ஜனதா ஆர்ப்பாட்டம் கடைக்கு பூட்டுபோட்டதால் பரபரப்பு

திருபுவனை,

ரேஷன் கடைகளில் கூடுதல் அரிசி வழங்காததை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் நேற்று திருபுவனையில் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கடை கதவை மூடி பூட்டுபோட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் கூடுதலாக அரிசி வழங்கப்படாததை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் திருபுவனையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருபுவனை ரேஷன் கடை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். வில்லியனூர் மாவட்ட தலைவர் மோகன்குமார், திருபுவனை தொகுதி தலைவர் அற்புதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வில்லியனூர் மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், பயிற்சி முகாம் தலைவர் பாலாஜி, விவசாய அணி மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, எஸ்.சி.பிரிவு மாவட்ட தலைவர் தனசேகரன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கதவை மூடி பூட்டு

சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜனதா கட்சியினர், திடீரென ரேஷன் கடையின் ஷட்டர் கதவை இழுத்து மூடி, பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பா.ஜனதா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் ரேஷன் கடை ஊழியர் கடையை மீண்டும் திறந்து வழக்கமான பணியில் ஈடுபட்டார்.

Next Story