முன்னதாக சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் செலவுக்காக மாத சம்பளம் முன்னதாகவே வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் புதுச்சேரி நகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு முன்னதாக சம்பளம் வழங்காததை கண்டித்து புதுவை கம்பன் கலையரங்கத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு உதயக்குமார் தலைமை தாங்கினார். விநாயகவேல் முன்னிலை வகித்தார். ஆனந்தகணபதி, வரதராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் சம்பளம் முன்னதாக வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story