ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு

புதுச்சேரி,
புதுச்சேரி நகராட்சி பரவலான வளர்ச்சியை மையமாக கொண்ட பகுதிகளை அடையாளம் கண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தயாரித்து வருகிறது. இதை செயல்முறைபடுத்துவதற்காக சென்னையை சேர்ந்த ஜே.எல்.எல். கன்சல்டன்ட் என்ற நிறுவனத்தின் மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக உப்பளம், உருளையன்பேட்டை தொகுதி மக்களின் கருத்துகேட்புக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த திட்டம் குறித்து நெல்லித்தோப்பு தொகுதி மக்களிடம் கருத்து கேட்க இன்று (வெள்ளிக்கிழமை) டி.ஆர்.நகர் சமுதாய நலக்கூடத்திலும், கொம்பாக்கம் மற்றும் முருங்கப்பாக்கம் தொகுதி மக்களிடம் கருத்துகேட்பதற்காக நாளை (சனிக்கிழமை) முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலிலும் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.

Next Story