அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்கவேண்டும் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்கவேண்டும் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:18 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்கவேண்டும் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி,

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய் தலைமையில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் கூட்டம் மற்றும் மகளிர் அணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, இலக்கிய அணி, மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை இழந்து வாடும் அ.தி.மு.க. தொண்டர்களை வழி நடத்தவும், கழகத்தை கட்டி காக்கவும், 33 ஆண்டுகள் ஜெயலலிதா உடன் இருந்து பணியாற்றிய சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், செல்வராஜ், பரமேஸ்வரி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ இந்திராகாந்தி, ராவணன், வெங்கடாஜலம், நடேசன், ராஜாராம் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story