பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரம் போதிய மண் கிடைக்காததால் தொழில் பாதிப்பு

கறம்பக்குடி,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் பொங்கல் பானை தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. போதிய மண் கிடைக்காததால் தொழில் பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் வருத்தத்துடன் கூறினர்.
மண்பானை தயாரிக்கும் பணி
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களில் பொங்கல் பண்டிகை தான், தமிழ் கலாச்சாரத்தின் வெளிபாடாகவும் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் உன்னத திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் கம்ப்யூட்டர் மையமாகி போன இக்காலத்திலும் மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இன்றும் நடைமுறையில் உள்ளது. இதனால் பொங்கல் வந்தால் மண்பானைகளுக்கான தேவை அதிகரித்து விடும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள மழையூர், நரங்கியப்பட்டு, வெள்ளாளவிடுதி, நெடுவாசல் ஆகிய பகுதியில் மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கறம்பக்குடி பகுதியில் தயாரிக்கப்படும் மண்பானைகள் கலை நுணுக்கத்துடன் தயார் செய்யப்படுவதால் இவை தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பானைகள் தவிர மண்ணால் செய்யப்படும் தண்ணீர் தொட்டிகள், அடுப்புகள், சட்டிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் கறம்பக்குடிக்கு வந்து மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.
தொழிலில் ஆர்வம் இல்லை
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில், குயவர் எனப்படும் வேளார் இனத்தை சேர்ந்த நாங்கள் மண்பாண்டங்கள் செய்வதை எங்கள் குலத்தொழிலாக செய்து வருகிறோம். இது மிக பயப்பக்தியுடன் செய்ய வேண்டிய தொழிலாகும். மாறி வரும் நவீன உலகில் மண்பாண்டங்களுக்கான தேவை அதிகம் இல்லை, இருப்பினும் பழமை மாறாத கலாச்சாரம் மிக்க தமிழர்கள் இன்னும் மண்பாண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமூக அந்தஸ்து இல்லை என்பதாலும் போதிய வருமானம் இல்லாததாலும் இளைய தலைமுறையினர் இத்தொழிலில் ஆர்வம் காட்டுவது இல்லை.
கறம்பக்குடி பகுதிகளில் சுமார் 50 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மண்பாண்டங்கள் செய்வதற்கு பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே அதற்கான மண்ணை சேகரிக்க தொடங்கி விடுவோம். தற்போது போதிய மழை இல்லாததால் வழக்கமாக எடுக்கும் குளங்களில் மண் எடுக்க முடியவில்லை. இதனால் மாட்டு வண்டிகளில் 10 கிலோ மீட்டர் சென்று மண் எடுத்து வருகிறோம். அதுவும் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story