ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் சாய்ந்தன


ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி 6 மின்கம்பங்கள் சாய்ந்தன

ஜெயங்கொண்டம்,

தெலுங்கானா மாநிலம் காண்டூரிலிருந்து கடப்பா கல் ஏற்றிக்கொண்டு தஞ்சையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் சைதாபேட்டையை சேர்ந்த கோதண்டராமன் ( வயது 42) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். நேற்று காலை ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் வேலாயுதநகர் அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் சாலை யோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. லாரி மோதியதில் அந்த மின்கம்பம் சாய்ந்ததோடு அந்த வரிசையில் இருந்த மேலும் 5 மின்கம்பங்கள் கீழே சாய்ந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். இதில் கோதண்டராமன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோதண்டராமனிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story