ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம் ஆயிரங்கால் மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டது

ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆயிரங்கால் மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழா
பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 28-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 29-ந்தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.
பகல் பத்து உற்சவத்தின் போது ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வெவ்வேறு அலங்காரங்களில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அப்போது அரையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் பாடி நம்பெருமாளை மகிழ்விப்பார்கள்.
சொர்க்கவாசல் திறப்பு
ஜனவரி 7-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். மறு நாள் (8-ந்தேதி) வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்றைய தினம் அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.
ராப்பத்து உற்சவம்
9-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது. இந்த நாட்களில் நம்பெருமாள் காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் திருநாள் அன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், 19-ந்தேதி இயற்பா சாற்று மறை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.
மூலவர் முத்தங்கி சேவை
வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் நம்பெருமாள் விலை மதிப்பற்ற நவரத்தின கற்களால் ஆன ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பது போல் மூலவர் ரெங்கநாதரும் முத்தங்கி சேவையில் காட்சி அளிப்பார். முத்தங்கி சேவையில் பெருமாளை சேவிப்பது மிகவும் உன்னதமானது என்பதால், பக்தர்களின் வசதிக் காக ஜனவரி 8-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்ட பின்னர் 17-ந்தேதி வரை சொர்க்கவாசல் கதவுகள் திறந்தே இருக்கும். சொர்க்கவாசலை கடந்து சென்றால் வைகுந்த பதவியை அடையலாம் என ஐதீகமாக நம்பப்படுவதால் வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டும் இன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அலங்காரம் செய்யப்பட்டது
லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்து விட்டு செல்வதற்காக ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. பரமபதவாசலின் கதவுகளில் புதிய வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. மேலும் ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள மணல் வெளியில் பக்தர்கள் வசதிக்காக பந்தல் போடப்பட்டு உள்ளது.
நவீன கேமராக்கள்
பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது பனி மற்றும் வெயில் தாக்கத்தில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக மேற்கூரை மற்றும் தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. கோவிலின் அனைத்து கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களில் மின் அலங்காரமும் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு கோவிலின் உள் பிரகாரத்தில் நாழி கேட்டான் வாசல் மற்றும் ராஜமகேந்திரன் சுற்று, கிளி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், உத்தர வீதி உள்ளிட்ட 35 இடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரி ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story