ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்-அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்-அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்-அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் ஈரோடு கிளைத்தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். அதிகாரிகள் சங்கத்தின் கிளைத்தலைவர் வேலு முன்னிலை வகித்தார்.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்தும், அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி பழனியப்பன், மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன், ஊழியர்கள் சங்கத்தின் ஈரோடு கிளைச்செயலாளர்கள் ரவி, ராஜேந்திரன் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story