திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி,
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கும் செல்லும் முக்கிய வழியாக உள்ளது. தினமும் பஸ், கார், லாரி, வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறுகிய வளைவுகளை கொண்டதால் திம்பம் மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. மேலும் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும், பொதுமக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
லாரி பழுது
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தூத்துக்குடியை சேர்ந்த ரவி ஓட்டினார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது லாரி திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் கார், பஸ், லாரி, வேன், கனரக வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் வாகனங்களில் இருந்து பொதுமக்கள் யாரும் கீழே இறங்கவில்லை. மேலும் கடும் குளிரால் அவதிப்பட்டனர். தாளவாடி மற்றும் சாம்ராஜ்நகரில் இருந்து மேட்டுப்பாளையம், திருப்பூருக்கு காய்கறிகள் ஏற்றிய லாரிகளால் உரிய நேரத்துக்கு செல்ல முடியவில்லை.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரி பழுதுபார்க்கும் பணி நடந்தது. காலை 8 மணி அளவில் லாரி பழுது சரிசெய்யப்பட்டது. அதன்பின்னரே நிலைமை சீராகியது. வாகனங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story