இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை மீட்க வேண்டும் உறவினர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை மீட்க வேண்டும் உறவினர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 23 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 2:21 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை மீட்க வேண்டும் உறவினர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு

தூத்துக்குடி,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 7 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

உறவினர்கள் கோரிக்கை

தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு மீனவர் பொது பஞ்சாயத்து தலைவர் சேசு, பொருளாளர் ஜான்சன், மாவட்ட நாட்டுப்படகு சங்க தலைவர் கயாஸ் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், சிறைபிடிக்கப்பட்டுள்ள 7 மீனவர்களின் உறவினர்கள் கலெக்டர் ரவிகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கடந்த 16–ந் தேதி விக்டர், அமலன், வெற்றிவேல், லிபோ, வினோத்குமார், அஜித்குமார், பிரவின் ஆகிய 7 பேரும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், கடந்த 21–ந் தேதி இந்திய கடல் பகுதியில் சுமார் 70 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

மீட்க வேண்டும்

அப்போது படகு என்ஜின் பழுதடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து படகை இயக்க முடியாமல் அவர்கள் தவித்து உள்ளனர். காற்றின் வேகத்தில் படகு இலங்கை கடற்பகுதிக்குள் இழுத்து சென்று உள்ளது. அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 7 மீனவர்களையும் சிறைபிடித்து உள்ளனர். பின்னர், அவர்களையும், படகையும் இலங்கைக்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதனால், அவர்களுடைய குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.


Next Story