தூத்துக்குடியில் கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற தபால் ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் ஏ.செல்வராஜ் தலைமை தாங்கினார். தலைவர் கே.இசக்கிமுத்து, பொருளாளர் சிவசூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், 7–வது ஊதியக்குழு கமிட்டி அளித்து உள்ள பரிந்துரையில், 24 அம்சங்கள் கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சாதகமானதாக இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த கமிட்டியின் பரிந்துரையை உடனடியாக வெளியிட வேண்டும். சாதகமான பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்


கூட்டத்தில் தூத்துக்குடி கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க உதவி செயலாளர் சங்கரநாராயணன், உதவி பொருளாளர் சுந்தரம் உள்பட 150–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து சென்னையில் வருகிற 29–ந் தேதி நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் ஊழியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


Next Story