நாசரேத்தில் பெண் என்ஜினீயரை கற்பழித்த பங்கு குரு கைது ரகசிய திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாகவும் பரபரப்பு புகார்

திருச்செந்தூர்,
நாசரேத்தில், ஆசை வார்த்தை கூறி பெண் என்ஜினீயரை கற்பழித்து விட்டு ரகசிய திருமணத்தை பதிவு செய்ய மறுத்த பங்கு குருவை போலீசார் கைது செய்தனர்.
பெண் என்ஜினீயர்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகள் அன்ட்ரூஸ் ரோஸ்லின்(வயது 37). எம்.டெக். என்ஜினீயரிங் படித்து உள்ள இவருக்கும், சைமன் என்பவருக்கும் கடந்த 1999–ம் ஆண்டு திருமணம் நடந்தது.
பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 2009–ம் ஆண்டு கணவரிடம் இருந்து ரோஸ்லின் விவாகரத்து பெற்றார்.
பங்கு குருவுடன் தொடர்பு
பின்னர் அவர் நாசரேத் பிரகாசபுரத்தில் உள்ள தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள பரலோக மாதா ஆலயத்துக்கு தினமும் செல்வது வழக்கம்.
இந்த ஆலயத்தில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த அருள் பிரபாகர்(33) பங்கு குருவாக பணியாற்றி வருகிறார். அவர், ஆலய வளாகத்தில் உள்ள பங்கு குரு இல்லத்தில் தங்கியிருந்தார்.
அடிக்கடி உல்லாசம்
அந்த ஆலயத்துக்கு ரோஸ்லின் அடிக்கடி சென்றபோது பங்கு குருவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி கள்ளக்காதலை வளர்த்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக அருள் பிரபாகர், ரோஸ்லினிடம் கூறியுள்ளார். இதைதொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
ரகசிய திருமணம்
கடந்த 9–ந் தேதி காலையில் அன்ட்ரூஸ் ரோஸ்லினை ஆலயத்துக்கு அருள்பிரபாகர் வரவழைத்துள்ளார். அங்கு வைத்து ரோஸ்லினுக்கு மோதிரம் மாற்றி அருள் பிரபாகர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அன்று முதல் இருவரும் கணவன், மனைவியாக அன்ட்ரூஸ் ரோஸ்லின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனராம்.
இந்த விசயம் அக்கம், பக்கத்தில் தெரிய வந்ததால் ஊர் அறிய கணவன்–மனைவியாக திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என ரோஸ்லின் கூறி வந்துள்ளார்.
கொலை மிரட்டல்
தங்களது திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அருள் பிரபாகரிடம், ரோஸ்லின் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு அருள் பிரபாகர் மறுப்பு தெரிவித்து ரோஸ்லினுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். பின்னர் ரோஸ்லின் வீட்டுக்கு வருவதை அருள் பிரபாகர் நிறுத்தி விட்டாராம்.
இதுகுறித்து ரோஸ்லின் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பங்கு குரு கைது
இதுதொடர்பாக அருள் பிரபாகரை போலீசார் நேற்று காலையில் கைது செய்தனர். மாலையில் திருச்செந்தூர் கோர்ட்டில் அவர் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் பங்குத்தந்தை அருள் பிரபாகர் அடைக்கப்பட்டார்.
மோதிரம் மாற்றி பெண் என்ஜினீயரை பங்கு குரு திருமணம் செய்து கொண்டு உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்தை பதிவு செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story