அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:22 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் அனஞ்சி தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான 7–வது ஊதியக்குழு 2016 ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் ரமேஷ், முருகேசன், கருத்தப்பாண்டி, செல்வராஜ், பரமகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story