நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்


நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று காலை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது அந்த கூட்ட அறைக்கு வெளியே கல்குளம் தாலுகா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நின்றுகொண்டு, பிரச்சினைக்குரிய தனது நிலத்தை கலெக்டர் நேரடியாக வந்து அளந்து தர வேண்டும். அவரை சந்திக்காமல் நான் செல்ல மாட்டேன். அதிகாரிகள் என்னை அவரை சந்திக்க அனுமதிக்காவிட்டால் அவர் வெளியேவரும்போது வழிமறிப்பேன் என்று புலம்பியபடி நின்று கொண்டிருந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு உருவானது. இதையடுத்து அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து பெண் போலீசாரும், பெண் ஊழியர்களும் சேர்ந்து அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்று, கலெக்டர் அலுவலக வாயில் அருகே கொண்டுபோய் விட்டனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, அந்தப்பெண் கூறும் நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் அதிகாரிகள் தலையிட்டு எந்த தீர்வும் காண முடியாது. இதைச் சொன்னால் அந்தப்பெண் புரிந்து கொள்ளாமல் வாரத்தில் 2, 3 நாட்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பிரச்சினை செய்து வருகிறார் என்றனர்.


Next Story