தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1,313 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது


தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1,313 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது
x
தினத்தந்தி 23 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 2:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1,313 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது

தஞ்சாவூர்,

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1,313 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமும், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் அவ்வப்போது உரம் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,313 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது.

தஞ்சை, நாகை, திருவாரூர்

இந்த உரங்கள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், தனியார் சேமிப்பு கிடங்கிற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story