கங்களாஞ்சேரி அய்யன்குளத்தை தூர்வார வேண்டும் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை

திட்டச்சேரி,
கங்களாஞ்சேரி அய்யன்குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
சந்திப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன்அன்சாரி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் தரைமட்ட குடிநீர் தேக்க தொட்டியை பார்வையிட்டார். அப்போது குடிநீர் தேக்க தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள மோட்டார்களை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இங்கிருந்து நாகை, கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சீராக தண்ணீர் வழங்கப்படுகிறதா என்று ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆதலையூர், ஏனங்குடி, வவ்வாலடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி, பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கோரிக்கைகள்
அப்போது கங்களாஞ்சேரி ஊராட்சி மின் தெருவிற்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பூண்டிமாதா கோவில் தெருவிற்கு சாலை வசதி செய்து தர வேண்டும். அய்யன்குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த மக்கள் சந்திப்பின்போது, திருமருகல் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருட்டிணன், திருப்புகலூர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் தங்ககணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசன், கங்களாஞ்சேரி அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் பீர்முகமது, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ரியாசுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக்அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் செய்யதுமுபாரக், மாவட்ட துணை செயலாளர் ஹமீதுஜெகபர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story