சிங்கம்புணரி அருகே பிரான்மலை கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டன


சிங்கம்புணரி அருகே  பிரான்மலை கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டன
x
தினத்தந்தி 24 Dec 2016 4:30 AM IST (Updated: 23 Dec 2016 6:27 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலில் ஐம்பொன் சிலை திருடப்பட்டும், உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணமும் திருடப்பட்டுள்ளது. பிரான்மலை கோவில் சிங்கம்புணரி அருகே பிரசித்தி பெற்ற கோவிலாகவும், இடமாகவும் உள்ள பிரான்மலை. இந்த கோவில் சிவகங்கை மாவட்டத

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை கோவிலில் ஐம்பொன் சிலை திருடப்பட்டும், உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணமும் திருடப்பட்டுள்ளது.

பிரான்மலை கோவில்

சிங்கம்புணரி அருகே பிரசித்தி பெற்ற கோவிலாகவும், இடமாகவும் உள்ள பிரான்மலை. இந்த கோவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதல் குடவரை கோயிலாகும். சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், பாரி மன்னர் ஆண்ட திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட குன்றக்குடி மடம் ஜந்து கோவில் தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்டது ஆகும். இங்குள்ள மங்கை பாகர், தேனம்மை கோவிலின் மூல சன்னதிக்கு வலது புறத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோரின் ஜம்பொன் சிலைகள் உள்ளன. இந்தநிலையில் கோவில் காவலாளி நேற்று கோவிலில் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோவிலின் மூல சன்னதியில் உள்ள உண்டியல், பைரவர் ஆலயத்தில் உள்ள உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் சுந்தரர் மூர்த்தி ஜம்பொன் சிலை ஒன்றும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கோவில் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார்.

விசாரணை

இதனையடுத்து கோவில் கண்காணிப்பாளர் கேசவன் இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் திருட்டு நடந்த கோவிலுக்கு வந்து விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு முருகனும் விசாரணை நடத்தினார். இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் உமாபதி கூறும்போது, மார்கழி மாத திருப்பெயர்ச்சி நடைபெறுவதால் காலை 4 மணிக்கு கோவில் திறக்கப்படும். இதனால் நள்ளிரவு நேரத்தில் தான் சிலைகள் திருடப்பட்டும், உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. மங்கை பாகர் தேனம்மை கோவிலில் இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியளிக்கிறது. சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள உண்டியல் காணிக்கை திருடப்பட்டிருக்கலாம். கும்பாபிஷேக பணிகள் நடக்கும் நேரத்தில் இப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. மர்மநபர்கள் கோவிலின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலையை திருடியுள்ளனர் என்றார்.


Next Story