தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் வைகை பாசன திட்டக்குழு உறுப்பினர், முதல்–அமைச்சருக்கு கோரிக்கை
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வைகை பாசன திட்டக்குழு உறுப்பினர், தமிழக முதல்–அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் கிடைக்கவில்லை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வைகை பாசன திட்டக்குழு உறுப்பினர
ராமநாதபுரம்,
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வைகை பாசன திட்டக்குழு உறுப்பினர், தமிழக முதல்–அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்ணீர் கிடைக்கவில்லைராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வைகை பாசன திட்டக்குழு உறுப்பினர் பாலசுந்தரமூர்த்தி முதல்–அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
வைகை பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் வைகை அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. தற்போது வைகை அணையில் 24 அடி அளவு தண்ணீரே உள்ளது.
வைகை அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் 20 அடிக்கு மேல் மணல் மேடாகி சகதியாக உள்ளது. இந்த மேடான மண்ணை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் வைகை ஆற்றில் வேலிக்கருவை மரங்கள் மண்டிக்கிடக்கிறது. அவைகளை அப்புறப்படுத்தி ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
வறட்சி மாவட்டமாக...ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் முற்றிலும் உப்புநீராகவே உள்ளது. மேலும் நீர்மட்டமும் மிகவும் ஆழத்தில் சென்று விட்டது. உப்பு நீரைக்கொண்டு எந்த விவசாயமும் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் உப்புநீராக இருப்பதால், கூடுதல் நிதி ஒதுக்கி கண்மாய்களையும் வரத்துக்கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும்.
நிவாரண உதவிவிவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகையையும், இந்த ஆண்டுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும். இதுதவிர வறட்சி நிவாரண தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.