கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் மத்திய அரசுக்கு, மீனவர்கள் வலியுறுத்தல்


கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் மத்திய அரசுக்கு, மீனவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 6:33 PM IST)
t-max-icont-min-icon

கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கடல் அட்டை கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் அரிய உயிரினமாக கருதப்படும் கடல் அட்டை, கடல் குதிரை, கடல் சுறா, கடல் பசு உள்பட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிட

ராமநாதபுரம்,

கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடல் அட்டை

கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் அரிய உயிரினமாக கருதப்படும் கடல் அட்டை, கடல் குதிரை, கடல் சுறா, கடல் பசு உள்பட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001–ம் ஆண்டு ஜுலை 7–ந்தேதி தடை விதித்தது.

கடும் எதிர்ப்புக்கு பின்னர், 2001–ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதில் 23 கடல் பொருட்களுக்கான தடையை மட்டும் மத்திய அரசு நீக்கியது. ஆனால் கடல் அட்டைக்கான தடை நீக்கப்படவில்லை.

கடல் அட்டைக்கு மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் நல்ல கிராக்கி இருந்ததன் காரணமாக இந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடல் அட்டையை பிடித்து ஏற்றுமதி செய்து வந்தனர்.

தடையை நீக்க வேண்டும்

கடல்அட்டை மீது மத்திய அரசு தடை விதித்ததன் காரணமாக மீனவர்கள் மட்டுமின்றி அதனை நம்பி உள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கடல் அட்டை மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:–

கடல் அட்டை அழியும் இனம் இல்லை. 6 மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளை பொரிக்கும் தன்மை கொண்டது. இதுபோன்ற சூழ்நிலையில் கடல் அட்டையை தடை செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

கண்டனத்துக்குரியது

இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் கடல் அட்டை அழிந்து வரும் இனம் என்று அறிவிக்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும் தடை விதித்து, மீனவர்களின் வலைகளில் சிக்கி உடனடியாக இறந்துபோகும் கடல் அட்டைகளை பிடிப்பதாக கூறி அரசு கைது நடவடிக்கை மற்றும் அபராதம் விதித்தல் போன்றவற்றை செய்து வருவது கண்டனத்துக்குரியது.

அண்டை நாடான இலங்கையில் இறால்பண்ணைகள் அமைப்பது போன்று கடல் அட்டை பண்ணைகள் அமைப்பதை அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருகிறது. கடல்அட்டை மீதான தடையை நீக்குவதாக தேர்தலின்போது மட்டும் அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிக்கின்றனர். தேர்தலுக்கு பின்பு கண்டுகொள்வதில்லை.

ஆண்டுகள் பல கடந்த போதிலும் கடல் அட்டை மீதான தடை மட்டும் இதுவரை நீக்கப்படவில்லை. கடந்த 2001–ம் ஆண்டு முதல் கடல் அட்டைகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது கடல் அட்டைகள் கடல் முழுவதும் பல்கி பெருகி நிறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலையை கருத்தில் கொண்டும், மீனவர்களின் வாழ்வா£ரத்தை மனதில் வைத்தும் கடல்அட்டை மீதான தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.


Next Story