பாலம் வேலை காரணமாக தொரப்பாடி பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் அதிகாரி தகவல்


பாலம் வேலை காரணமாக தொரப்பாடி பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2016 1:45 AM IST (Updated: 23 Dec 2016 7:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூர்– தொரப்பாடி சாலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சிறைப்பணியாளர் குடியிருப்பு அருகே பாலம் மற்றும் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தொரப்பாடி, துத்திப்பட்டு தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளுக்கு செல்லும் குடிந

வேலூர்,

வேலூர்– தொரப்பாடி சாலையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சிறைப்பணியாளர் குடியிருப்பு அருகே பாலம் மற்றும் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தொரப்பாடி, துத்திப்பட்டு தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவேண்டி உள்ளது. இந்த பணி முடியும் வரை வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட தொரப்பாடி, மேட்டுப்பாறை, பலவன்சாத்து, இடையன்சாத்து, விருப்பாட்சிபுரம், அரியூர், சித்தேரி பகுதிகளுக்கும், கணியம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த குப்பம் ஊராட்சிக்கும் குடிநீர் வழங்கப்படாது. எனவே பொதுமக்கள் உள்ளூர் குடிநீர் தொட்டி மூலம் குடிநீரை சிக்கனமாக சேமித்துவைத்து பயன்படுத்துமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாகப்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.


Next Story